×

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் பைனலில் சிட்சிபாஸ்

துபாய்: பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரான துபாய் டூட்டி பிரீ ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தகுதி பெற்றார்.அரை இறுதியில் பிரான்சின் கேல் மான்பில்சுடன் மோதிய சிட்சிபாஸ் 4-6, 7-6 (7-4), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 2 மணி, 59 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போர்னா கோரிச்சை (குரோஷியா) மிக எளிதாக வீழ்த்தினார். பைனலில் பெடரர் - சிட்சிபாஸ் மோதுகின்றனர்.

கிர்ஜியோஸ் அசத்தல்: மெக்சிகானோ ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 7-5, 5-7, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் ஜான் ஐஸ்னரை (அமெரிக்கா) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 7-6 (7-0), 6-3 என்ற நேர் செட்களில் கேமரான் நோரியை (இங்கிலாந்து) வென்றார். இறுதிப் போட்டியில் கிர்ஜியோஸ் - அலெக்சாண்டர் ஸ்வெரவ் மோதுகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siddipspace ,Dubai Duty Free , Siddipspace,Dubai Duty , Tennis Fine
× RELATED துபாய் டென்னிஸ் ஜாஸ்மின் சாம்பியன்