×

இந்திய வீரர் என நினைத்து தங்கள் நாட்டு போர் விமானியை அடித்தே கொன்ற பாகிஸ்தானியர்

புதுடெல்லி: கடந்த 27ம் தேதி இந்தியாவுக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப் படையினர் அதிரடியாக விரட்டியடித்தனர். அப்போது பாகிஸ்தானின் எப்- 16 ரக விமானம் இந்திய விமானப்படையால்  சுட்டு வீழ்த்தப்பட்டது.
    அதே நேரத்தில் சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்ற விமானமும் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதுபற்றி முழு விவரம் அறியாத பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  2 இந்திய  விமானப்படை வீரர்கள் பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.     ஆனால், அடுத்த சில மணி நேரத்துக்குள் ஒரு இந்திய விமானி மட்டுமே பிடிபட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தில் இருந்தவர் ஷாஹாஸ் என்ற பாகிஸ்தான் விமானப் படை வீரர். அவரது விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. இதை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.  தனது விமானம் சுடப்பட்டதும் பாகிஸ்தான் விமானி ஷாஹாஸ், பாரசூட் மூலம் குதித்தார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தரையிறங்கிய அவரை, இந்திய வீரர் என கருதி பாகிஸ்தான் மக்கள் சரமாரியாக தாக்கினர். அவர் பரிதாபமாக  உயிரிழந்தார்.இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் கலித் உமர் சமூகவலைதளத்தில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது அதில் உயிருடன் இருந்த பாகிஸ்தான் வீரரை இந்தியர் என கருதி அடித்து  கொன்றதாக பதிவிட்டுள்ளார். அபிநந்தனை நாம் கொண்டாடும் அதே நேரம், அதே சாதனை செய்த ஷாஹாசின் தியாகம் குறித்து பேசப்படவில்லை என இந்திய ராணுவ மேஜர் சுரேந்திர பூனியா தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani ,Indian ,warrior , Indian player,fighter ,their country, Pakistani
× RELATED இந்தியாவில் உளவு பார்த்ததாக 2...