×

சம்ஜவுதா ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீடிக்கும் நிலையில், இரு நாடுகளிடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம்  தெரிவித்துள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே, கடந்த 1976ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டம் அட்டாரி, இந்தியாவின் டெல்லி  வரை இயக்கப்படுகிறது. கடந்த 1994ம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய தினத்தன்று, இதன் சேவையை  இந்தியாவும், பாகிஸ்தானும்,  தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என இந்தியா கூறியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samjhauta , Samjhauta, train service, Start
× RELATED சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு...