×

பெண் துறவிகளை கொச்சைப்படுத்துவதாக காட்சி ஹன்சிகா மீது ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: பெண் துறவிகளை கொச்சைப் படுத்துவது போல அமைக்கப்பட்டுள்ள காட்சியில் நடித்த பிரபல நடிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் மஹா. இந்த படத்தின் போஸ்டர்களில் காசி நகரின் பின்னணியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும்  ஹன்சிகா, கஞ்சா அல்லது புகை பிடிப்பது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

 இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் முன்னணியின்  அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் அளித்திருந்தார். புகார் மீது நடவடிக்கை இல்லை.இதையடுத்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hansika , The scene,female saints, Hansika, court
× RELATED கார்டியன் விமர்சனம்…