×

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயான், மனோஜ்க்கு நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை வரும் 4ம் ேததி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில்  10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடக்கிறது. பின்பு, அனைவரும் ஜாமீனில் வந்தனர். இவர்களில், சயான், வாளையார் மனோஜ் இருவரும் கொடநாடு சம்பவத்தில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து தமிழக தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.  ஆனால் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். பின்னர், அவர்களது ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை ஜாமீனை ரத்து செய்தார். இதன்பின் 2 பேரும் தலைமறைவாகினர். இதையடுத்து, நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருச்சூரில் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வரும் 4ம் தேதி வரை  இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodatan ,Saian ,Manoj , Kodanad murder case, Sian, Manoj,
× RELATED ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்