×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்துக்கு குழு அமைத்தது கண்துடைப்பு

* தமிழர் தேசிய கொற்றம் அறிக்கை

சென்னை: தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம் செய்ய அரசு அறிவித்திருக்கும் குழு, கண்துடைப்பு என்று தமிழர் தேசிய கொற்றத்தின் தலைவர் வியனரசு குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் திமுக சார்பில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள், பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பர், வாதிரியான், மூப்பன், காலாடி, பண்ணாடி வயக்காரன் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதை எல்லாம் சேர்த்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என அழைக்கவும், இத்தகைய மக்களுக்கு 10 விழுக்காடு கல்வி வேலை வாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு வழங்கவும், அதற்கான அரசாணை வெளியிடுதல் தொடர்பான ஆய்வுக்காக 2011ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான ஆணையம், அவர் பதவி விலகளால் முடங்கியது.

திமுக ஆட்சிக்கு வரும் காலங்களில் அந்த ஆணையத்தை செயல்படுத்தி தேவேந்திரகுல மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் தெரிவித்துள்ளதை கண்டு அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கை வெளியிட்டிருப்பது கண்துடைப்பு நாடகமே. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு, தேவேந்திர குல மக்களிடமும், இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, முதல்வர் அறிக்கை வெளியிட்டது எதிர்வரும் மக்களவை தேர்தலில் அவர்களுக்கு வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சியே அதிமுக அரசு இப்படியொரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆகையால் இந்த குழுவை நீக்கிவிட்டு ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வியனரசு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,name change ,Devendra Gula Vellore , DMK, MK Stalin
× RELATED திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு...