×

போட்டியாளர்களுக்கு கிலி தரும் கியா

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த சூழலில் கியா நிறுவனமும் இந்தியாவில் கால் பதித்துள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் பகுதியில் இயங்குகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டிரையல் புரொடக்ஸன் துவங்கியது. இங்கு தற்போது பரிசோதனை அடிப்படையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் கியா நிறுவன கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருப்பதால், விரைவில் கார்களை அறிமுகம் செய்து, போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்க கியா முடிவு செய்துள்ளது. இதற்காக எஸ்பி2ஐ (SP2i) காரை முதலில் களத்தில் இறக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் கியா நிறுவன கார் இதுவாகத்தான் இருக்கும்.

இந்த காரின் டிரையல் புரொடக்ஷன்தான் தற்போது அனந்தப்பூர் தொழிற்சாலையில் துவங்கியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எஸ்பி2ஐ எஸ்யூவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டு விடும். ரூ.9 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் கியா எஸ்பி2ஐ கார் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா எஸ்பி2ஐ கார் விற்பனைக்கு அறிமுகமானவுடன், அடுத்தடுத்து பல்வேறு தயாரிப்புகளை களமிறக்க கியா முடிவு செய்துள்ளது. இதில், முக்கியமானது கார்னிவல் (Carnival). இது எம்பிவி வகையை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இது, கியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் 2வது காராக இருக்கும்.

இன்ஜின் பெர்பார்மென்ஸ், சவுகரியமான இடவசதி, சொகுசு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்து விதத்திலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை காட்டிலும், கியா கார்னிவல் எம்பிவி தலைசிறந்து விளங்கும் என அடித்துக்கூறுகிறது கியா நிறுவனம். எஸ்பி2ஐ, கார்னிவல் தவிர, ேமலும் ஒரு காம்பேக்ட் மற்றும் கிராஸ்-ஹேட்ச்பேக் வகை கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் வலுவான டீலர்ஷிப் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளையும் கியா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. துவக்கத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 35 டீலர்ஷிப்களை அமைக்க கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் இந்த அதிரடி, போட்டியாளர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rivals , Kia
× RELATED விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின்...