ஏபிஎஸ் பிரேக்குடன் வருகிறது டிவிஎஸ் அப்பாச்சி 160

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் 150-160 சிசி ரக பைக் மாடல்களில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி மாடல் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த பைக்கில் டபுள் கிராடில் ஸ்பிளிட் சிங்க்ரோ ஸ்டிப் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சேஸீயானது டிவிஎஸ் ரேஸிங் அமைப்பின் ஆலோசனைகளின்படி உருவாக்கப்பட்டது. இந்த பைக்கில் 159.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 16.28 பிஎச்பி பவரையும், பியூவல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இன்ஜின் அதிகபட்சமாக 16.56 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் ரகத்தில் மிகச்சிறந்த செயல்திறன் பைக் என்பதைவிட, அற்புதமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் பைக் மாடலாக கூறலாம். தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறந்த மாடலாக கூறலாம். சுஸுகி ஜிக்ஸெர், ஹோண்டா சிபி ஹார்னெட், யமஹா எப்இசட் வி3.0, பஜாஜ் பல்சர் என்எஸ்160 ஆகிய போட்டியாளர்களுக்கு இணையாக இப்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக் வந்துவிட்டதால், முக்கிய தேர்வாக மாறி இருக்கிறது. இந்த  மாடலுக்கு ரூ.98,644 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.  சாதாரண மாடலைவிட ரூ.6,999 கூடுதல் விலையில் வந்துள்ளது. இந்த மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. அடுத்த சில வாரங்களில்  கார்புரேட்டர் மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட  இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: