×

போலீஸ் சேனல்..... நிழல் எஸ்.பி. தர்பார்

கோவை மாவட்ட காவல்துறையில் ‘’நிழல் எஸ்.பி.’’யாக ஒருவர் உலா வருகிறார். இவர்தான், எஸ்.பி.க்கு ரைட் ஹேண்ட், லெப்ட் ஹேண்ட் என எல்லாமே... இவர், சொல்லுறதைத்தான் எஸ்.பி அப்படியே நம்புகிறார். இதை, அட்வான்டேஜ் ஆக பயன்படுத்திக்கொண்டு இந்த ‘நிழல் எஸ்.பி.,’ அனைத்து காவல் அதிகாரிகளிடமும் மாதம்தோறும் ‘’கட்டிங்’ பெறுகிறார். கொடுக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு, எஸ்.பி., பெயரை பயன்படுத்தி, ஏதாவது ஒரு வகையில் ‘செக்’ வைத்துவிடுகிறார்.

இதனால், பயந்துபோன டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என பல அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுச்சென்றுவிட்டனர். இன்ஸ்பெக்டராக இருந்துகொண்டே தன்னை, நிழல் எஸ்.பி.யாக காட்டிக்கொள்ளும் இந்த நபருக்கு ‘கரு...’ என துவங்கும் ஒரு சப்-டிவிசன் டிஎஸ்பி ரொம்ப குளோஸ். அவர்தான், இவரது காட்டில் மழை பெய்ய வைக்கிறார். தனக்கு கீழ்நிலை அதிகாரியாக இருந்தாலும் பரவாயில்லை, நமக்கும் ஏதாவது கிடைக்குதே.... என வேறு வழியின்றி கூஜா தூக்கி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police Channel ,SB Darbar , Police Channel
× RELATED போலீஸ் சேனல்