×

அபிநந்தன் விடுவிப்பு குறித்த டுவிட்டில் சானியா வரவேற்பு; மாலிக் பாக். ஆதரவு கோஷம்...தெலங்கானாவில் மிரட்டல்

ஐதராபாத்: விமானி அபிநந்தனை வரவேற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்ட டுவிட்டிற்கு அவரது கணவர் சோயப் மாலிக் போட்ட டுவிட்டால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், தொடர்ந்து இந்தியா  சார்பிலேயே சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறார். தெலங்கானா மாநில அரசின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.சானியா மிர்சாவின் திருமணமான நாள் முதல் இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்படும் போதெல்லாம் அவர் பதிவிடும் டுவிட்டால் சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து சானியா மிர்சா, எந்த  கண்டனமும் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்குப் பதிலடியாக அவர் நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார். அதில், ‘பிரபலங்கள் என்றாலே தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில்  கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கோபமாக கூறியிருந்தார். இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை வரவேற்று சானியா டுவிட் செய்திருந்தார். உடனே நெட்டிசன்கள், ‘இந்திய விமானப்படை அதிகாரியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தபோது, உங்களது கணவர்  சோயப் மாலிக் என்ன பதிவிட்டார் தெரியுமா?’ என அவரின் டுவிட்டை மறுபதிவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தைக்  குறிப்பிட்டு, ‘ஹமாரா பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை சோயப் மாலிக் பதிவிட்டிருந்தார். இதற்கு தெலங்கானா நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ‘சானியாவின் அரசு தூதர் அந்தஸ்தை பறிக்க வேண்டும். சோயப் மாலிக்கை தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்’ என்றும் மனு அளித்துள்ளனர். சானியா - மாலிக் தம்பதியரின் டுவிட் விவகாரம், தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reception ,Malik Pak ,Sania ,Abhinandan ,Telangana , Abhinandan, Sania, Malik, Pakistan, Telangana
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...