×

60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வளர்ச்சிபணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. பட்டய பயிற்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும் 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மடிகணினி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottiyan ,teachers , 60 thousand,teachers, given , fold system, Minister Chengottiyan
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...