×

ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம்; சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

மும்பை: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சாரிடம் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குனராக சந்தா கோச்சார் இருந்த 2009 முதல்  2011 வரையிலான கால கட்டத்தில், வீடியோகோன் நிறுவனத்துக்கு ரூ.3250 கோடி கடன் வழங்கியுள்ளார். விடியோகோன் நிறுவனம் அதை திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஜ விசாரணை நடத்திய  விசாரணையில் வங்கி அதிகாரி சந்தா கோச்சாரின் கணவருக்கு வீடியோகோன் நிறுவன அதிபரின் துணை நிறுவனம் ஒன்று ரூ.64 கோடி அளித்தது தெரியவந்தது.

இந்த தொகையானது வங்கிக் கடன் பெற சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு, வீடியோகோன் அதிபர் வேணுகோபல் லஞ்சமாக அளித்ததுள்ளதாக தகவல் வெளியானது. எனவே சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக்  கோச்சார், விடியோகோன் அதிபர் வேணுகோபல் உள்ளிட்ட சிலர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த பிப்., மாதம் சந்தா கோச்சார் உள்ளிட்டோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து  சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் இமிக்ரேஷன் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர்  வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனையடுத்து இன்று சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subada Kochar ,bank ,ICICI ,Enforcement Officers , ICICI Bank, ICICI Bank Fraud, Chanda Kocha, Malacca, Investigation
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...