×

கொடநாடு கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

ஊட்டி: கொடநாடு கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதியன்று, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது. வழக்கில் 10 பேரும் ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர்  டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் தமிழக போலீசார் கைது செய்தனர்.  பின்னர், 2 பேரின்  ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, நீதிபதி வடமலை, ஜாமீனை ரத்து செய்து  பிடிவாரன்ட்  பிறப்பித்தார்.

ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதன்பின்னர் எவ்வித உத்தரவும் வழங்கப்படாத நிலையில், 2 பேரும் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து நீலகிரி போலீசார், கேரளாவுக்கு சென்று சயான், மனோஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,Manoj ,courtroom , Kodanad, robbery case, cyan, manoj, tributary court
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...