×

திமுக கூட்டணிக்கு ஐஜேகே ஆதரவு; தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் தேவை; ஸ்டாலினால் தான் முடியும்; பாரிவேந்தர்

சென்னை: மக்களவை தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கும் சூழலில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் முக்கிய கட்சிகள் தங்களின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் புதுச்சேரி தொகுதியும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டனர்.

இதே போல மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது. கொங்கு நாடு  மக்கள் கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடைய ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் மக்களைவை தேர்தலில் ஐஜேகே கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் தேவை என்று தெரிவித்த பாரிவேந்தர், அந்த அரசியல் மாற்றம் திமுக தலைவர் ஸ்டாலினால் தான் முடியும் என்று அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி பற்றி தற்போது எதுவும் பேசவில்லை என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IGK ,alliance ,DMK ,Stalin ,Pariventar ,Tamil Nadu , IJK, Parivantar, DMK Alliance, MK Stalin,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி