×

நாடு திரும்பிய அபிநந்தனுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பாகிஸ்தான் போர் விமானங்களை துரத்தி சென்று அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய விமானப்படையை சேர்ந்த சென்னை விமானி அபிநந்தன், நேற்றிரவு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 60 மணி நேரத்துக்குப் பிறகு நாடு திரும்பிய அவரை வரவேற்க, வாகா எல்லையில் காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்றிரவு 9.15 மணிக்கு வாகா எல்லை கதவுகள் திறக்கப்பட்டு, இந்திய ராணுவ அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் மகிழ்ச்சியும்,  வாழ்த்தும் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி

விமானப்படை வீரர் அபிநந்தனின் வீரத்தால் நாடே பெருமை கொள்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நம் நாடடின் ராணுவம் 130 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

அபிநந்தனின் வீரம், கண்ணியம், வீரம் நம் எல்லோரையும் பெருமைபட வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அபிநந்தன் நாடு திரும்பியதை மிகுந்த அன்புடன் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

விமானப்படை வீரர் அபிநந்தன் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆபத்து நேர்ந்த போதும் அமைதியை வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை, விடா முயற்சி மூலம் நமக்கெல்லாம் பாடம் கற்பித்து இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது செயல்கள் மூலம் நம் மீது நம்பிக்கை கொள்ள நமக்கு பாடம் கற்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

இந்தியா திரும்பியுள்ள அபிநந்தனை இந்திய மக்களோடு சேர்ந்து தாமும் வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ராணுவ வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது மிகுந்த மன ஆறுதலை தருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். விடுதலை பெற்ற அபிநந்தனை காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Rahul ,party leaders ,Congress ,Abhinandan , India, Pakistan, Pilot, Abhinandan, Wagah border, Prime Minister Modi, Congress leader Rahul Gandhi, Nirmala Sitaraman, MK Stalin
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...