×

பிரதமர் பதவி மீது ஆசையில்லை நான் பக்கா ஆர்எஸ்எஸ்.காரன்: நிதின் கட்கரி பல்டி

புதுடெல்லி: ‘‘பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை, நான் ஒரு முழுமையான ஆர்எஸ்எஸ் தொண்டன். தேசத்துக்காக உழைப்பது மட்டுமே எனது கடமை’’ என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மக்களவை ஏப்ரலில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜ.வில் பிரதமர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டெல்லியில் நேற்று அளித்த பே்டடியில் கட்கரி இதை மறுத்தார் அவர் கூறியதாவது: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார். நான் ஒரு `பக்கா’ ஆர்எஸ்எஸ் தொண்டன். எனது பணி தேசத்துக்காக உழைப்பது மட்டுமே. மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி பயணிக்கிறது.

அமைச்சர்களாகிய நாங்கள் அவருக்கு பக்க பலமாக உள்ளோம். அப்படியிருக்கும் போது ஏன் பிரதமர் பதவி போட்டி குறித்து என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள்? உலக பொருளாதாரத்தில் இந்தியா வலுவான வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும். மோடி தலைமையில் கிராம மக்கள், விவசாயிகள், சமூக பொருளாதார மாற்றத்துக்காக நலத்திட்டங்களை செயல்படுத்துவதே எனது குறிக்கோள். எனக்கு அளிக்கப்படும் பணி எதுவோ அதனை நாட்டுக்காக திறம்பட செய்வேன். பாஜ, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக நாங்கள் எதிரிகள் அல்ல. இது நமது பாரம்பரியம். அடல் பிகாரி வாஜ்பாயி, ஜவகர்லால் நேரு, அவ்வளவு ஏன் மோடியும் கூட எதிர்க்கட்சியினரை வரவேற்றுள்ளனர். இவ்வாறு கட்கரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakka RS Karnan , Prime Minister, Pakka RSS, Nitin Gadkari
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது