×

சீனா உறுதி இந்தியா, பாக். அணு ஆயுத நாடல்ல

பீஜிங்: ‘இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் அல்ல’ என்று சீனா கூறியுள்ளது.  அணுசக்தி சப்ளை செய்யும் 48 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவை சேர்க்க சீனா முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தானை அணுசக்தி வல்லமை வாய்ந்த நாடாக ஏற்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் அளித்த பேட்டியில் ‘`இந்தியா, பாகிஸ்தானை அணு ஆயுத நாடுகளாக சீனா ஒருபோதும் ஏற்காது. இந்த நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டோம்’’ என்றார்.  அதேபோல்,  `வடகொரியாவையும் அணு ஆயுத வல்லமை மிக்க நாடாக சீனாவால் ஏற்க முடியாது’’ என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,India ,Pak , China, India and Pakistan
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...