×

சின்னவெங்காயம் விலை சரிந்தது : கிலோ 12க்கு விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து ஒரு கிலோ வெங்காயம் 12 என நேற்று விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்தது. கிலோ 40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி,  அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதுதவிர, மகாராஷ்டிராவில் இருந்தும் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் உள்ளூர் சந்தைக்கு வரத்து அதிகரித்து, கிலோ 50 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது படிப்படியாக குறைந்து உழவர் சந்தையில் கிலோ 12 முதல் விற்பனை செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் 20க்கும் குறைவாகவே வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும்போது, கிலோ 150 கொடுத்து விதைகள் வாங்கி பயிரிட்டு, ஏக்கருக்கு 1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், தற்போது விலை குறைந்து விட்டதால், அறுவடை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுக்கக்கூட கட்டுப்படி ஆகவில்லை,’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cinnamonagye ,Kil 12 , Small onion, price declined,Selling to Kil 12
× RELATED தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.1,520 குறைந்தது