×

தமிழ்நாட்டில் ரத்தக்களறி ஏற்படுத்த பாஜகவினர் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயலுக்கு மாநில அரசு துணை போகிறது : முத்தரசன் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் ரத்தக்களறி ஏற்படுத்த பாஜகவினர் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயலுக்கு மாநில அரசு துணை போவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர், முதல்வர் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் அமைப்புகள் கருப்புக்கொடி காட்டி, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆயுதங்கள் இன்றி போராட்டம் நடத்திட அரசியல் அமைப்பு சட்டம் வழிவகை  செய்துள்ளது. நாட்டின் பிரதமர் தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள் - துரோகங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே மதிமுக சார்பில், பிரதமர் வரும் இடங்களில் ஜனநாயக முறையில் அமைதியான முறையில் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். திருப்பூரில் கருப்புக் கொடி காட்டிய போது, ஒரு பெண்ணை அனுப்பி பாஜகவினர் செருப்பை வீச செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மோடிக்கு எதிராக, மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டிய போது பாஜகவினர் காவல்துறையினர் முன்னிலையில் மதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாட்டில்களையும், கற்களையும் எடுத்து வீசியுள்ளனர். பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறை செயலை கண்டிப்பதுடன், வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ரத்தக்களறி ஏற்படுத்த பாஜகவினர் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயலுக்கு மாநில அரசு துணை போவது கண்டிக்கதக்கது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state government ,BJP ,Tamil Nadu ,Muthrasan , state government, support the anti-democratic action
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...