×

கோ பேக் மோடியா, கம் பேக் மோடியா மக்கள்தான் தீர்மானிப்பார்கள்

* சமூகவலைதளங்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை
* அமைச்சர் ஜெயக்குமார் டென்ஷன் பேட்டி

சென்னை: கோ பேக் மோடியா, கம் பேக் மோடியா என மக்கள்தான் தீர்மானிப்பார்கள். சமூக வலைதளங்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழாவில் மீன்வள துறை  அமைச்சர் ஜெயக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதை தொடர்ந்து,  செய்தியாளர்களுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். கோ பேக் மோடியா கம் பேக் மோடியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். கம் பேக் மோடி என கூறும் காலம் வரும். ஜெட் வேகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தேமுதிக கூட்டணிக்கு வரும். காங்கிரஸ் கூட்டணி அல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் நல்ல முடிவு எடுப்பார். பிரதமர் மோடி 6ம் தேதி சென்னை வரும்போது கூட்டணி இறுதி வடிவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Go Pack MODIA, Come Bag MODI, will decide
× RELATED நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை...