×

பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர் நியமனம் : வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரீஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் என்பது அதிர்ச்சி தருகிறது.மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத்தவர்களையே பணி நியமனம் செய்கிறது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியபிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.தமிழகத்தில் சுமார் 80 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும். அனைத்துப் பொதுத்துறைகளிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Northern Provincial Appointment in Public Sector ,Vaiko , Northern Provincial Appointment,Public Sector Undertaking,Vaiko condemned
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...