×

எல்லையில் 2 நாளில் 35 தாக்குதல்கள் எதிரொலி : டெல்லிக்கு ‘ஹை-அலர்ட்’ எச்சரிக்கை

புதுடெல்லி: எல்லையில் கடந்த 2 நாளில் பாகிஸ்தான் துருப்புகள் 35 முறை தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், டெல்லிக்கு ‘ஹை-அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 29 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், பாபாகுண்ந்த் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நெருங்கியபோது அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அதற்குப் பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்தச் சண்டையின் இறுதியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறியும் வகையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இருதரப்பு நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  பொது மக்கள் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், உளவு அமைப்புகள் தரப்பில், மத்திய அரசிடம் அளித்த தகவல்களின் விபரங்கள் தற்போது வௌியாகி உள்ளது.

அதன்படி, கடந்த 26ம் தேதி இந்திய விமானப்படை விமானம் தாக்குதல் நடத்திய பின், கடந்த சில நாட்களில் மட்டும் பாகிஸ்தான் படைகள் மற்றும் தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 35 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர் தாக்குதல் நடப்பதால், அபிநந்தன் விடுவிப்புக்கு பின்னர் பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேேபால், நாட்டின் 29 இடங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி ஹை - அலர்ட் பகுதியாக உஷார்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முக்கிய  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மேற்கு கடற்படை தலைமையகம், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய துணை ராணுவ படையினருடன், ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடல்வழியே தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எதிர்கொள்ள மேற்கு கடற்படையும் கடலோர பாதுகாப்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா காவல்துறையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள துறைமுகம், ஒடிசா மாநிலத்திலுள்ள பாராதீப் துறைமுகம் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில விமான நிலையங்கள் மூடப்பட்டும், சில இடங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு ெசல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் உச்சகட்டமாக டெல்லி தலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை ‘ஹை-அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attacks ,border ,Delhi , High-alert, Delhi, warning
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...