×

வாகாவிற்கு சென்று இந்திய விமானி அபிநந்தனை வரவேற்பது எனக்கு கௌரவம் : முதல்வர் அம்ரிந்தர் சிங்

பஞ்சாப் : இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை கடந்த 27ம் தேதி இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டார். மிக் 21 ரக போர் விமானத்தின் சென்ற அபிநந்தனை எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களது பாதுகாப்பில் அபிநந்தனை கடந்த இரண்டு நாட்களாக வைத்துள்ளனர். இந்நிலையில் விமானி அபிநந்தனை விடுப்பதாக பாக்., பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார். வாகா எல்லையில் விமானி அபிநந்தன் இன்று விடுவிடுக்கப்பட உள்ளார். அபிநந்தனை வரவேற்க விமானப்படை உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வாகா பகுதிக்கு சென்று இந்திய விமானி அபிநந்தனை வரவேற்பது தான் எனக்கு கௌரவம் என பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் அம்ரிந்தர் சிங், முதல்வர் மோடிக்கு அனுப்பிய தகவலில், அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நான் தற்போது பஞ்சாபின் எல்லை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய உள்ள செய்தி கேள்விப்பட்டேன். அபிநந்தனும், அவரது தந்தையையும் போல நானும் இந்திய விமான படையை சேர்ந்தவன் என்பதால், வாகா பகுதிக்கு சென்று அவரை வரவேற்பதே எனக்கு கௌரவம் என்று குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amirth Singh ,Indian ,Wagah , Wagah,Indian pilot Abhinandan, Chief Minister Amirth Singh
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்