×

ஜம்மு-காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு வேலை வாய்ப்பில் 10% ரிசர்வேஷனுக்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள பட்டியல் இனத்தவருக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 சதவிதம் அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அரியானா மாநிலத்தில் ரிவாரி மாவட்டத்தில் ரூ.1,299 ேகாடியில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தியாவில் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதை மீறினால் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். நவீன எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க பேம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது. ஓமியோபதி மத்திய கவுன்சில் கொண்டுவரும் வரைவு திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதே போல பலகோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SC-STs ,Jammu ,meeting ,Cabinet ,Kashmir , Jammu and Kashmir, SC-STs, jobs
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...