×

நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம்: பாதியில் முடித்தார் கலெக்டர்

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் படுத்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு கலெக்டர் வெளியேறினார்.நாகை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை  நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவல கூட்ட அரங்கில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.  வருவாய் அலுவலர் இந்துமதி,  கலெக்டரின் அறிக்கையை வாசிக்க தொடங்கினார். அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் குறுக்கிட்டு, `நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாள் காத்திருந்து நெல்லை விற்றோம். நெல்லுக்கு ஒரு மாதமாக பணப்பட்டுவாடா செய்யவில்லை’ என்றார். அதை ஆதரித்து பெரும்பாலான விவசாயிகள் எழுந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது, கலெக்டர்  கூட்டத்தை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு கேட்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். எனினும் கண்டன குரல் எழுப்பியடி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.ஆனால், காவிரி தமிழதேச சங்க தலைவர் சுப்பையன் தலைமையில் 25 விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் இருந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த துண்டுபிரசுரங்களை கிழித்து வீசியவாறு திடீரென அரங்கத்திற்குள் நுழைந்து கலெக்டர் முன் தரையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தை நடத்த முடியாமல் கூட்டத்தை ரத்து செய்து விட்டு கலெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் எழுந்து சென்றனர். இதையடுத்து விவசாயிகள் கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : floor ,meeting , Hydro carbon,Nagana, Farmers, lack meeting, Completed, Collector
× RELATED ‘வெளி உலகுக்கு தெரிய வேண்டும்...