×

77 நாட்களுக்கு பின்னர் மேகாலயா சுரங்கத்தில் 2வது சடலம் மீட்பு

ஷில்லாங்:  மேகாலயாவில் ஜெயின்டியா ஹில் மாவட்டத்தின் லும்தாரி பகுதியில் உள்ள சுரங்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அருகில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர் மழை காரணமாகவும் சுரங்கத்தை நீர் சூழ்ந்தது. இதில் 15 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் கடற்படை, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து ஜனவரி 23ம் தேதி ஒரு சடலம் மீட்கப்பட்டது. இது அசாமை சேர்ந்த அமிர் ஹூசைன் என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட சுரங்கத்தில் தொடர்ந்து மீதமுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து வந்தன. இந்நிலையில், நேற்று காலை, மோசமான நிலையில் மற்றொரு சடலத்தை மீட்பு பணியினர் கண்டெடுத்தனர். சுரங்கத்தில் இருந்து சுமார் 200 அடி ஆழத்தில் இருந்த சடலம் கடற்படையின் நீருக்கடியில் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் வாகனம் மூலமாக மீட்கப்பட்டது. சுரங்கத்தில் சிக்கி சுமார் 77 நாட்களுக்கு பின் இரண்டாவது சடலம் மீட்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mine ,Meghalaya , 77 days , 2nd body,recovery ,Meghalaya mine
× RELATED சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில்...