×

முஷ்டாக் அலி டி20 விதர்பா அணியை வீழ்த்திய தமிழகம்

சூரத்: சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் தமிழ்நாடு அணி  விதர்பா அணியை 3விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது வெற்றியை பெற்றது. சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கின்றன. சூரத்தில் நேற்று நடைப்பெற்ற பி-பிரிவு லீக் சுற்று ஒன்றில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் களமிறங்கிய விதர்பா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.  ஜிதேஷ் சர்மா 27 ரன்களும், ரூபேஷ் ரத்தோட் 51 ரன்களும் எடுத்தனர்.  தமிழ்நாடு தரப்பில் தன்வர் 3 விக்கெட்களும், கேப்டன் அஸ்வின்2 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், விக்னேஷ், சாய்கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களமிறங்கியது. கடந்த போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் முரளி விஜய் பொறுப்பாக விளையாடினார்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜே.கவுசிக் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார்.  முரளி விஜய் 16.5வது ஓவரில் ரன் அவுட்டான போது அணியின் ஸ்கோர் 120. அவர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களும் 74 ரன்கள் சேர்த்திருந்தார். கவுசிக் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 41 ரன்கள் விளாச தமிழ்நாடு 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.அதனால் தமிழ்நாடு 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி தனது 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. விதர்பா தரப்பில்  எஸ்பி.வாக் 2 விக்கெட்களும், வாக்ரே, தாக்கூர்,  கர்நேவர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,Mushtaq Ali T20 Vidarbha ,Tamil Nadu , Murtak Ali T20, Vidarbha team, Tamil Nadu
× RELATED அணி மாற தயாராகிவிட்டார்? தமிழக அரசு மீது ராமதாஸ் திடீர் தாக்கு