×

முக்கூடல் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

பாப்பாக்குடி: முக்கூடல் அண்ணா நகர் கருமாரி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது.முக்கூடல் அண்ணா நகர் கருமாரி அம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி, நேற்று முன்தினம் கால்நாட்டு விழா நடந்தது. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
வருகிற 4ம்தேதி மாலை குடியழைப்பு, மறுநாள் காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து மதியக்கொடை நடக்கிறது. இரவு மகுடத்துடன் கூடிய வில்லிசை மற்றும் சாமக்கொடை, கரகாட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அண்ணா நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shrine ,508 Tiruvai Pooja , The shrine temple, Tiruvilaku puja
× RELATED வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா