×

அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்குமாறு பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்திய தூதர் நேரில் வலியுறுத்தல்

டெல்லி : பாகிஸ்தானில் சிக்கியுள்ள விமானி அபிநந்தனை மீட்பதற்கான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலில் இந்திய விமானி ஒருவர் தங்கள் வசம் உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் இருப்பதை இந்தியாவும் உறுதி செய்தது.

மிக் 21 ரக போர் விமானத்தின் சென்ற அபிநந்தனை எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களது பாதுகாப்பில் அபிநந்தனை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. இதையடுத்தது அபிநந்தனை மீட்கும் நடவடிக்கைகளை இந்தியா சார்பில் எடுக்கப்பட்டு வந்தன. இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணை தூதரை, நேற்று நேரில் அழைத்து பேசிய நிலையில், இன்று இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாட்டின் போர் கைதிகளை பரஸ்பரமாக எவ்வித விசாரணையும் நடத்தாமல் மாற்றிக்கொள்வது என்று பாகிஸ்தான்-இந்தியா இடையே ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் இந்திய விமானி அபிநந்தனை பத்திரமான அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிநந்தனை அனுப்பி வைக்காதாபட்சத்தில், உலக நாடுகள் மத்தியில் இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ஜோவலுடன், பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காக ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambassador ,India ,Ministry of Foreign Affairs ,Pakistani ,Abhinandan , Abhinandan, Pak, Ministry of External Affairs, Indian Ambassador
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...