×

இந்தியாவுடனான டி20 தொடரை கைபற்றியது ஆஸ்திரேலிய அணி

பெங்களூரு: இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. விசாகப்பட்டிணத்தில் நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ரோகித், மார்கண்டே, உமேஷ் நீக்கப்பட்டு தவான், விஜய் ஷங்கர், சித்தார்த் கவுல் இடம் பெற்றனர். கே.எல்.ராகுல், தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 61 ரன் சேர்த்தது. ராகுல் 47 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கோல்டர் நைல் பந்துவீச்சில் ஜை ரிச்சர்ட்சனிடம் பிடிபட்டார்.
தவான் 14 ரன், ரிஷப் பன்ட் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 10.5 ஓவரில் 74 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து டோனியும் அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆஸி. பந்துவீச்சை சிதறடித்தனர்.
கோஹ்லி 29 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் கோல்டர் நைல் வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை பறக்கவிட, இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. அபாரமாக விளையாடிய கோஹ்லி - டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது (48 பந்து). டோனி 40 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் பிஞ்ச் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கார்த்திக் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விளாசினார். கடைசி பந்தை கோஹ்லி சிக்சருக்கு தூக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது.

கோஹ்லி 72 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), கார்த்திக் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் பெஹரன்டார்ப், கோல்டர் நைல், கம்மின்ஸ், ஷார்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரராக ஷார்ட், ஸ்டெய்னிஸ்  இருவரும் களம் இறங்கினர். ஸ்டெய்னிஸ் 7 ரன் எடுத்திருந்த ேபாது கவுல் பந்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் 8 ரன்கள் இருக்கும்ேபாது சங்கர் பவுலிங்கில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடினார். ஷார்ட்டுடன் ஜோடி சேர்ந்த அவர் சிக்ரும், பவுண்டரிருமாக பறக்க விட்டார். ஷார்ட் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக 19.4 ஓவரில் ஆஸ்திரேலியா 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் கைப்பற்றியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australian ,team ,India , India, the T20 series, the Australian team
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...