×

கார்கள் நேருக்கு நேர் மோதி நகராட்சி ஆணையாளர் உட்பட 4 பேர் பரிதாப சாவு: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: ஆந்திராவில் தேர்தல் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பியபோது கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நகராட்சி ஆணையாளர் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஆந்திராவின் ராயதுர்கம் நகராட்சி  ஆணையாளர் ஷேக் இப்ரஹீம். இவர் நேற்று முன்தினம் நகராட்சி அதிகாரி அமீர்பாஷா, ஆர்ஐ கலாதர், ஊழியர்கள் பிரபு, முருகன் ஆகியோருடன் தேர்தல் பணிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு இரவு அனைவரும் காரில் ராயதுர்கம் புறப்பட்டனர். காரை டிரைவர் எர்ரிசுவாமி ஓட்டினார்.  நல்லம்பல்லி அருகே சென்றபோது எதிரே சென்னை நோக்கி சென்ற கார், ஷேக் இப்ரஹீம் சென்ற கார் மீது மோதியது. இதில் ஆணையாளர் ஷேக் இப்ரஹீம், அமீர்பாஷா, கலாதர், எர்ரிசுவாமி ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராயதுர்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த  பிரபு, முருகன் ஆகியேரை ராயதுர்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பல்லாரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ராயதுர்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mourners ,death ,Andhra ,commissioner , Cars, Municipal Commissioner, Death and Andhra
× RELATED ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி...