எகிப்தில் பரிதாபம் ரயிலில் தீ விபத்து; 25 பேர் கருகி பலி

கெய்ரோ, பிப்.28: எகிப்தின் கெய்ரோ ரயில் நிலையத்தில் தடுப்பு சுவர் மீது டீசல் டேங்க் வெடித்து ஏற்பட்ட ரயில் விபத்தில் 25 பேர் பரிதாபமாக பலியாகினர். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று ராம்சிஸ். இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று பயணிகளுடன் வந்த ரயில் ஒன்று திடீரென அங்கிருந்த பிளாட்பார தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் ரயிலின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் தீ வேகமாக பரவி வானில் கரும்புகை பரவியது. தீ விபத்து பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 25 பேர் உடல் கருகி பலியாகினர். 47 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. எகிப்தில் ரயில்களில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் ரயில் விபத்து நடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு நாடு முழுவதும் 1793 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>