×

அதிக விலைக்கு சோப்பு விற்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு 8 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 120 சோப்பை 169 ரூபாய் என விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட்டுக்கு 8 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்லாவரம், அருந்ததிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் சத்யன். இவர் கடந்த 11.9.2016ம் ஆண்டு வீட்டுக்கு தேவையான  பொருட்கள் வாங்குவதற்காக சென்னை, பல்லாவரம் ரயில் நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கே 3 வாங்கினால் 1 இலவசம் என்று  குளியல் சோப்பு விளம்பரம் செய்யப்பட்டு இருந்துள்ளது. மேலும் அதன் விலை 120 எனவும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இதனால் சத்யன் அதனை எடுத்துக்கொண்டு கேஷியரிடம் சென்றபோது 169 பணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது அட்டைமேல் சிறிதளவு ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் 169 இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யன் கடைக்காரர்கள் ஏமாற்றம் செய்கின்றனர். மேலும் இது சோப்பின் விலையைவிட அதிகமானது என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஜஸ்டின் டேவிட் முன்பு விசாரணைக்கு வந்தபோது பெங்களூருவை சேர்ந்த சோப்பு தயாரிக்கும் நிறுவனம், ‘‘சோப்பை தயாரிப்பது மட்டுமே எங்களது வேலை. இலவசம், விலை வைத்து விற்பது எங்களுடைய வேலை’’ கிடையாது என்று கூறினர். இதையடுத்து நீதிபதி, சோப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகி உள்ளது. எனவே அதிகமாக வசூல் செய்த 49 ரூபாயை மனுதாரருக்கு திருப்பி வழங்க வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கு 3 ஆயிரம், வழக்கு செலவுக்கு 5 ஆயிரம் இழப்பீடு வழங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : supermarket , Soap, super market, fine, consumer court
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்:...