×

நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ20,000 கோடி ஜிஎஸ்டி மோசடி கண்டுபிடிப்பு: அதிரடி நடவடிக்கை எடுக்க ஆணையம் முடிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ20,000 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, இதன் வரி வருவாய் அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், உச்சபட்ச வரி விதிப்பான 28 சதவீத பிரிவில் இருந்து பெரும்பாலான பொருட்கள் குறைந்த வரி பிரிவுக்கு மாற்றப்பட்டதால் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு வரி குறைப்பு மட்டுமல்ல, வரி ஏய்ப்பும் காரணம். இன்புட் வரி கிரெடிட் பெறுவதற்கு போலி பில் தயாரித்து முறைகேடு செய்வது அதிகரித்து வருகிறது.  இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ20,000 கோடிக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த ஆணையத்தின் உறுப்பினர் (புலனாய்வு) ஜான் ஜோசப் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி வரை சுமார் ரூ20,000 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ10,000 கோடியை மீட்டு விட்டோம். நேற்று முன்தினம் மட்டும் ரூ1,500 கோடி மதிப்பிலான போலி பில்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இவை வரி கிரெடிட்டாக ரூ75 கோடி பெறுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ25 கோடி மீட்கப்பட்டு விட்டது. தற்போது ரியஸ் எஸ்டேட் துறையிலும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் ரியல் எஸ்டேட் துறை பிரதிநிதிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. வியாபாரிகளில் 5 முதல் 10 சதவீதம் பேர்தான் வரி கிரெடிட் பெற போலி பில் தயாரித்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். வரி ஏய்ப்பை முறியடிக்க மேலும் அதிரடி நடவடிக்கைகள்  எடுக்கப்படும். இதனால் நேர்மையாக தொழில் புரிவோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Current fiscal year, GST fraud, discovery
× RELATED அட்சய திருதியை ஒட்டி, ஒரு சவரன் ரூ.1,240...