×

ஹெலிகாப்டர் திடீர் விபத்து 6 விமானிகள் உட்பட 7 பேர் பலி

பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து குண்டுவீசிய நிலையில், நேற்று காலை விமானப்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்தில் எரிந்து சாம்பலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரின் பத்காம் பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் விமானப்படையில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடக்கும் பகுதியிலிருந்து சில கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில், 6 விமானப்படை அதிகாரிகள் பலியானதாக கூறப்படுகிறது. அங்கு எரிந்த நிலையில் கிடந்த மற்றொரு சடலம், அப்பகுதியை சேர்ந்த கிபாயத் ஹுசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : helicopter crash ,pilots , The helicopter, the sudden accident, killed 7 people
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!