×

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 2வது சந்திப்பில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், அவர் வெளியிட்ட அறிக்கை; பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேசினேன். அப்போது அமெரிக்கா-இந்தியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை பராமரிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியிடம் பேசிய போது, தற்போது நிலவும் பதற்றத்தை தணிக்க ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்கவும், பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இருநாட்டு அமைச்சர்களிடமும் கட்டுப்பாடுடன் இருக்கவும் பதற்றத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்கவும் முக்கியத்துவம் அளிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,Pakistan ,terrorist organizations , Pakistan, United States, emphasis
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...