இந்திய விமானப்படைக்கு ஹஜ் அசோசியேஷன் பாராட்டு

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  இந்திய விமானப்படையின் தாக்குதல் என்பது மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டு பாகிஸ்தான் தீவிரவாதத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட மிக சவாலான பணியாகும். எந்த குறைபாடும் இல்லாமல் மிகத் தெளிவாக இந்த பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது . உலக அரங்கில் நாம் உயரிய வீரத்தோடும் விவேகத்தோடும் இருக்கிறோம் என்பதை பறைசாற்றுகிறது. இந்த வெற்றிகரமான தாக்குதல் இந்த நேரத்தில் நாம் இந்தியர் என்ற எண்ணமும் பெருமையும் மேலும் மேலும் உயர்ந்து நிற்கிறது. வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்திய மத்திய அரசுக்கும் விமானப் படைக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வெளிநாடு அழைத்துச் செல்வதாகக்கூறி...