×

சீனா, ரஷ்யா கூட்டறிக்கை

சீனாவின் வூஹான் நகரில் 16வது ‘ரிக்’ (ரஷ்யா, இந்தியா, சீனா) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடக்கிறது. இதில், இந்த நாடுகளுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் சர்வதேச பிரச்னைகள், முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதல் பற்றி சீனா, ரஷ்யா வெளியுறவு அமைச்சர்களிடம் விளக்கினார். பின்னர், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து சீனா, ரஷ்யாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில், `தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். எந்த வகையிலும் தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,Russia , China, Russia, a joint report
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...