×

அபிநந்தனின் வீடியோ நீக்கம்

இந்திய விமானி அபிநந்தன் தொடர்பாக 2 வீடியோக்களை பாகிஸ்தான் ராணுவம் முதலில் வெளியிட்டது. அதில் ஒன்றில், பொதுமக்கள் அபிநந்தனை தாக்கி முகத்தில் ரத்தம் சொட்டுவது போலவும் மற்றொன்றில் கண்களை கட்டி, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவது போன்ற காட்சிகள் இருந்தன. இவற்றை டிவிட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் ராணுவம், சில நிமிடத்திலேயே அவற்றை நீக்கியது. ஏனெனில், ஜெனீவா மாநாடு உத்தரவுப்படி, போர் கைதியின் புகைப்படங்களை பொது வெளியில் வெளியிடக் கூடாது. அவரை தாக்கக் கூடாது. சிறிது நேரத்தில் மற்றொரு வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அதில், அபிநந்தன் முகம் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் சாதாரணமாக பேசுகிறார்.

‘தில்’ பதில்
பாகிஸ்தான் வெளியிட்ட அபிநந்தனின் 3வது வீடியோவில், அவர் சாதாரணமாக பயமின்றி டீ குடித்து கொண்டிருக்கிறார். அவரிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். அதற்கு சிறிதும் பயமின்றி, ‘‘மன்னித்து விடுங்கள், என்னால் எந்த பதிலும் கூற முடியாது. டீ மிகவும் பிடித்திருக்கிறது’’ என பதிலளிக்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinanthan , Abhinanthan, Video Removal
× RELATED நண்பர்களே! மோடி சொன்ன ‘நல்ல நாள்’...