×

பின்லேடனை ஒழிக்க அமெரிக்கா செய்ததுபோல் பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்துவோம்: அருண் ஜெட்லி எச்சரிக்கை

புதுடெல்லி: அல் கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கை போல் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவும் தாக்குதல் நடத்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை அங்கிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை நேற்று முன்தினம் அடியோடு அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டதாக பாகிஸ்தானும் கூறி வருகிறது. இந்த நிலையில், இருநாடுகள் இடையே பல ஆண்டுகளாக நிலவும் பிரச்னை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை அழிக்கவே அங்கு தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம். ஒருவாரம் கூட ஒரு நாளாக ெதரியும் அளவுக்கு கடந்த சில நாட்களாக இந்தியா அதிவேகமாக செயல்படுகிறது. அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை பாகிஸ்தானுக்குள் புகுந்து சுட்டு வீழ்த்தியது போல் அதிரடியாக செயல்பட எங்களால் முடியும். இனியும் பொறுக்க முடியாது.  பலநாள் கனவு இப்போது நனவாகியுள்ளது. பல நாள் கோபம், ஏமாற்றம் இப்போது நிறைவேறியுள்ளது. எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arvind Jaitley ,Pakistan ,bin Laden , Bin Laden, US, Pakistan, attack, Arun Jaitley
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி இல்லை.!