×

அய்யம்பேட்டையில் நகையை பாலீஷ் செய்வதாக கூறி 2 பெண்களிடம் 8½ பவுன் அபேஸ்: போலீஸ் விசாரணை

தஞ்சை: அய்யம்பேட்டையில் நகையை பாலீஷ் செய்வதாக கூறி 2 பெண்களிடம் 8½ பவுன் அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை இரட்டை தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி கமலா (வயது 71). இவரது மகள் லட்சுமி (வயது 54). இவர் மாற்றுத்திறனாளி. இவரது சகோதரர் சீனிவாசன் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன்குமார் பெங்களூருல் வேலை பார்த்து வருகிறார். கமலாவும், லட்சுமியும் அய்யம்பேட்டையில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கமலா வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கமலா தான் அணிந்திருந்த 2½ பவுன் நகையை மர்ம நபரிடம் கழட்டிக்கொடுத்துள்ளார்.

அவரை தொடர்ந்து லட்சுமியும் தான் அணிந்திருந்த 6 பவுன் செயினை கழட்டி மர்ம நபர்களிடம் கொடுத்தார்.அப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கேட்டு வாங்கிய மர்ம நபர்கள் இரண்டு செயினையும் அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் போட்டு அலசி உள்ளனர். திடீரென தண்ணீர் இருந்த பாத்திரத்தை கமலாவிடம் கொடுத்த மர்ம நபர்கள், நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டனர். அவர்கள் சென்ற பிறகு கமலாவும், லட்சுமியும் பாத்திரத்தில் கையை விட்டு பார்த்த பொழுது நகைகளை காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்து கமலா அய்யம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : females ,Police investigation , 8½ pound ,2 females ,polycarbonate,Ayyambetta, Police investigation
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்:...