×

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல்... வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 258 வணிக வளங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் பெயரில் 2 நாளாக கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வியாபாரிகள் கொடைக்கானல், கலையரங்கம் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கின்றனர். கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மற்றும் வணிக வளங்கள் சீல் வைக்கப்படுவதால் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடைகளை அடைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள வியாபாரிகள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buildings ,Kodaikanal , Seal , buildings built , Kodaikanal rules
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...