×

புதுக்கோட்டை மாவட்டத்தில் காளையை வீரர் அடக்குவது போல் தத்ரூப சிலை

 *ரூ.10 லட்சத்தில் கட்டுமான பணிகள் துவக்கம்


புதுக்கோட்டை : சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போல் தத்ரூப மாக உலோக சிலை ரூ.10லட்சத்தில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் கோயம் புத்துார், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடை பெறும் மாவட்டமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு 64 ஜல்லிக்கட்டு நடை பெற்றது. இந்த ஆண்டு தொடர்ந்து பல்வேறு ஜல்லிக்கட்டுகள் நடை பெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு என்றால் தமிழகத்தில் புதுக்கோட்டை பிரதான இடத்தை பிடித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால் நாட்டு மாடுகளின் எண்ணிகை அதிகரித்துள்ளது.  

இதன் மூலம் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் முக்கியத்துவம் பிடித்து ள்ளது. இத்தகைய சிறப்பைப் போற்றும் விதமாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் ரூ.10 லட்சத்தில் தத்ரூபமாக உலோகச் சிலை அமைக்கப்பட உள்ளது. சிலை வைப்பதற்காக அப்பகுதியில் பீடம் அமைத்தல் உள்ளிட்ட கட்டு மானப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் சிலையைத் திறக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவில் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக மாறிவிட்டது. குறிப்பாக மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளனர். குறிப்பாக மருத்துவர்கள், வருவாய்துறையினர், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு  விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு உலக சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளையுடன் கூடிய வீரர் சிலையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற உலோக சிலையை வடிவமைக்கும் பணி கும்பகோணத்தில் நடை பெற்று வருகிறது. இந்த சிலை அமைப்பதற்காக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே பிரிவு சாலை பகுதியில் வட்ட வடிவில் தடுப்பும், அதன் மையத்தில் பீடமும் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களுக்கள் சிலை அமைக்கப்படும். மேலும், இச்சிலை புதுக்கோட்டையின் முக்கிய அடையாள சின்னங்களில் ஒன்றாகவும் இடம்பிடிக்கும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pattukkottai ,district , Pudukottai ,Jallikattu, Player with bull
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...