×

நிர்மலாதேவியை ஓராண்டாக சிறையிலேயே வைத்திருப்பது ஏன்? : உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை : நிர்மலாதேவி வழக்கு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஓராண்டாக நிர்மலாதேவியை சிறையிலேயே வைத்திருப்பதன் அவசியம் என்ன என்றும், நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி விடுவிப்பதில் ஏதேனும் அச்சம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என கூறிய நீதிபதிகள் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான விழக்கை நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேரை மட்டும் வைத்து முடிக்க திட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi ,jail ,High Court Judge , Nirmaladevi, Jail, High Court Branch, Srivilliputur Women's Court
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!