காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா துவக்கம்

*20ம் தேதி பால்குடம்

காரைக்குடி :காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழா மிகவும் பிரசித்துபெற்றது. இக்கோயில் பால்குட விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஒரு மாதத்திற்கு விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது.

alignment=


மார்ச் 10ம் தேதி மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை, 12ம் தேதி காலை கணபதி பூஜை, காலை 5.28க்கு கொடியேற்றம், 6.57க்கு காப்புகட்டுதல் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் கரகம், மது, முளைப்பாரியும், 20ம் தேதி காலை 8 மணிக்கு காவடி, பூக்குழி, பால்குடம் நடக்கிறது. 21ம் தேதி இரவு 8.20க்கு காப்பு பெருக்குதல், இரவு அம்மன் வீதி உலாவும், 22ம் தேதி மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthuramaniyanam ,festival ,Karaikudi , Karaikudi ,Meenakshipuram ,Muthumariyamman Temple, Muthumariyamman
× RELATED சூரன்கோட்டை மீனாட்சிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு