×

அம்மூர் மார்க்கெட் கமிட்டிக்கு 15ம் தேதிவரை நெல்மூட்டைகளை கொண்டுவர தடை-விவசாயிகள் அதிர்ச்சி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட நகரங்கள், சுற்றியுள்ள கிராமங்களுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் வீடு திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் அதிகமாகிக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கண்ட அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள 8 நெல் குடோன்களில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் நெல் மூட்டைகள் வைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக நெல் மூட்டைகள் அனைத்தும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு தினசரி வரும் விவசாயிகள் அனைவரும் நெல் மூட்டைகள் வைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நெல் மூட்டைகளை எடுத்து வரவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தரப்பில் போர்டு ஒன்று வைக்கப்பட்டு அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து திரும்பி செல்கின்றனர்….

The post அம்மூர் மார்க்கெட் கமிட்டிக்கு 15ம் தேதிவரை நெல்மூட்டைகளை கொண்டுவர தடை-விவசாயிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ammur Market Committee ,Ranipet ,Ammoor ,Lalapettai ,Solingar ,Ponnai ,Arakkonam ,Kaveripakkam ,Walaja ,Ammoor Market Committee ,Dinakaran ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...