×

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் 2வது சுற்றில் பெடரர்

துபாய் : பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரான துபாய் டூட்டி பிரீ ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபருடன் நேற்று மோதிய பெடரர் 6-4 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி பெடரரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த கோல்ஸ்கிரைபர் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்துக்கு நீடித்தது.  மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுத்திடம் 1 மணி, 22 நிமிடம் போராடி தோற்றார். கனடாவின் மிலோஸ் ரயோனிச் தனது முதல் சுற்றில் 4-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் ஜான் லெனார்டு ஸ்ட்ரபிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

போபண்ணா ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் ஷரண் ஜோடி 2-6, 6-7 (2-7) என்ற நேர் செட்களில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பெனாய்ட் பேர் (பிரான்ஸ்) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Federer ,round , Dubai, ATP Tennis,Federer
× RELATED கிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை...