×

அம்பத்தூர் சோதனைச் சாவடியில் எஸ்.ஐ வசூல் வேட்டை: வைரலாகும் வீடியோ

சென்னை:  அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை,  கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள  சோதனைச் சாவடியில் போலீஸ் எஸ்.ஐ. அற்புதம், தலைமையில் ஒரு காவலர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, எஸ்.ஐ. அற்புதம்,  அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை வழிமறித்து ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா 50 முதல் 100 ரூபாய் வரை கட்டாய வசூலில் ஈடுபட்டார். மேலும், முறையாக ஆவணங்கள் வைத்திருந்தாலும் ஏதேனும் காரணம் கூறி, வசூல் செய்தார். அவர்களது வசூல் வேட்டையை சமூக ஆர்வலர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருக்கிறது. இந்த வைரல் வீடியோ உரையாடலை பார்த்து சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் முறையாக ஆவணங்களை கொண்டு வந்தாலும் போலீசார் பணம் வசூலிக்கின்றனர்.
ஒருசிலர் ஆவணங்கள் இல்லை என்று மெத்தனமாக கூறிவிட்டு போலீசாரிடம் பணத்தை கொடுத்துவிட்டு பறக்கின்றனர். இதனால், குற்றச்சம்பவங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்கிறது. இதற்கு போலீசாரின் முறைகேடான வாகன தணிக்கையே காரணம். எனவே, சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் அடிக்கடி காவல் சோதனை சாவடிகளில் முறையாக ஆய்வு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : checkpoint ,Ambattur , Ambattur, checkpoint, SI collection
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...