×

அமித்ஷா மிரட்டல் எதிரொலி பாஜ பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், தென்மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்பு

* அதிக கூட்டம் காட்ட உத்தரவு
* அதிமுகவினர் ஆதங்கம்

சென்னை : அமித்ஷா மிரட்டலை தொடர்ந்து, கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தென்மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அதிக அளவு கூட்டத்தை காட்டவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மிக சொற்ப அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் பாஜ மேலிடம் அதிமுக மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் பல்வேறு மிரட்டல்களை பாஜ அதிமுகவுக்கு விடுத்து வருவதாக கூறப்படுகிறது.   இதை நிரூபிக்கும் வகையில், அண்மையில் மதுரை வந்த பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ேபசினார். அப்போது, தமிழகத்தில் தேர்தல் பணிகள் அனைத்தும் என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) தலைமையில்தான் நடைபெற வேண்டும். அதிமுக தலைமையில் நடைபெறக்கூடாது. பாஜ சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார். இந்த மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதில் இருந்து அதிமுகவை பாஜ மிரட்டி வருவது நிரூபணமானது. மேலும், அமித்ஷாவின் மிரட்டல் வீடியோ அதிமுகவினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வருகிற 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார். அவர் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதாவது, அரசு நிகழ்ச்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளார். இரண்டாவதாக பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், தொகுதிகளை அறிவிப்பதில் அதிமுக, பாஜ இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால், வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது என்பது முடியாத காரியமானது. இதைத் தொடர்ந்து வருகிற 5 அல்லது 6ம் தேதி பிரதமர் மோடி காஞ்சிபுரம் வருவார் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்து பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெறும் கூட்டம்தான். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜவில் இருந்து அதிமுகவுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தென்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில்   பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பொதுக்கூட்டத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டத்ைத காட்ட வேண்டும் என்று அதிமுகவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கேட்டு அதிமுக தலைவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத்தில் அதிக எம்பிக்களை கொண்ட 3வது பெரிய கட்சியாக திகழ்ந்து வருகிறோம். அப்படியிருக்கும் போது தமிழத்தில் நோட்டோவுடன் போட்டி போடும் ஒரு கட்சி மிரட்டுகிறதே? என்று அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Southern Ministers ,meeting ,Amitabh Bachchan Public , OPS and Southern Ministers participated,BJP Public meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...