×

நாடாளுமன்ற தேர்தலில் பாமக ‘ஆல் அவுட்’: வன்னியர் சங்க மாநில தலைவர் பேட்டி

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெய் ஹரி தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் அகில இந்திய வீர வன்னியர் குல சத்திரியர் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஜெய் ஹரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வன்னியர் சமுதாய மக்களுக்கும் பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன்னிய சமுதாய மக்கள் அன்புமணி மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர்.

ஒரு சில தொண்டர்களிடம் மட்டும் கருத்து கேட்டுவிட்டு கூட்டணி குறித்து முடிவு செய்தது ஏற்கத்தக்கதல்ல. இதன் பிரதிபலிப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். பாமக தனித்து நின்றிருந்தால் தனி மெஜாரிட்டியில் வந்திருக்கலாம். தற்போது முற்றிலும் வாக்குவங்கியை இழந்துவிட்டது.பூரண மதுவிலக்கை தமிழக பெண்கள் ஆதரித்து அன்புமணிக்கு ஆதரவாக இருந்த நிலையில், அந்த வாய்ப்பை இழந்துவிட்டு தேவையில்லாத கூட்டணியில் இணைந்துள்ளனர். இந்த முறை பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PAMA ,election ,Vannier Association , Parliamentary election, pamako, 'all out
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...